தேவர்கள் பாற்கடலை கடையும்போது, விஷம் எங்கிருந்து வந்ததோ, அங்கிருந்தே உயிர் காக்கும் அமிர்தமும் வந்தது. எது நோயை தந்ததோ, அதிலிருந்தே நோய் தீர்க்கும் மருந்து உருவாகிறது. எந்த கிரகத்தினால், சோதனை உண்டாகிறதோ, அந்த கிரகத்தின் வலிமையை நமக்கு சாதகமாக்கி பயன் பெறலாம். சந்திர பலத்தையும்,  நட்சத்திர வலிமையையும் அறிந்தால், பாலைவனமாக இருக்கும் வாழ்க்கையை சோலைவனமாக மாற்றலாம். 

Advertisment


பூராட நட்சத்திரத்தின் வலிமை 

ப் மிகுந்த தன்னம்பிக்கை மற்றும் தைரியம் கொண்ட வர்கள்.

ப் தோல்விகளைக் கண்டு அஞ்சாமல், தொடர்ந்து முயற்சிசெய்து வெற்றிபெறுவார்கள்.

Advertisment

ப் தேவையான விஷயங்களை சாதித்துக்கொள்வதில் வல்லவர்கள்.

ப் ஒரு விஷயத்தின் ஆழத்தை ஆராய்ந்து புரிந்து கொள்வதில் ஆர்வமுடையவர்கள்.

ப் சுதந்திரமாக சுயாதீனமாகச் செயல்படுவதையே விரும்புவார்கள்.

ப் சவால்களைச் சந்திப்பதில் வலிமையானவர்கள்.

ப் உற்சாகமாகவும், ஈர்க்கக் கூடிய ஆளுமையுடனும் செயல்படுபவர்கள்.  

பூராட நட்சத்திரத்தின் பலவீனம்  
பிறருக்கு உதவி செய்வதால், பிரச்சினையில் சிக்குவார்கள்.

கூட்டு கிரக பலன்
(பூராட நட்சத்திரத்தில் அமர்ந்த சந்திரனுடன், பிற கிரகங்கள் இணையும்போது உண்டாகும் பலன்களையும் ஆராயவேண்டியது முதன்மை யானது.)

Advertisment

ப் பூராட நட்சத்திரத்தில், சூரியனிருக்க, உயர்ந்த அதிகாரமான பதவியிலிருப்பார்.

ப் செவ்வாய் அமர்ந்திருக்க, தைரிய முடையவர். ஆனாலும், அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்துவார்.

ப் புதன் அமர்ந்திருக்க, 21 வயதிற்குபிறகு வெற்றியுடையவர்.

ப் சுக்கிரன் அமர்ந்திருக்க, இளம் வயதில் திருமணம் நடைபெறும்.

ப் சனி அமர்ந்திருக்க, மத நம்பிக்கை, தர்ம சிந்தை அதிக  உண்டாகும்.

ப் குரு அமர்ந்திருக்க, ஜாதகனின் தந்தைக்கு அற்ப ஆயுள்.

ப் ராகு அமர்ந்திருக்க, குடும்ப நன்மைக் காக, தன் வாழ்க்கையை தியாகம் செய்வார்.

ப் கேது அமர்ந்திருக்க, சேமிப்பில் ஆர்வம் அதிகம்.

star1

பூராட நட்சத்திர பாதப் பலன்

ப் பூராட நட்சத்திரத்தின் முதல் பாதம், சிம்ம நவாம்சம் சூரியனால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக் கியத்தில் குறையுடையவர்கள். 

ப் பூராட நட்சத்திரத்தின் இரண்டாவது பாதம், கன்னி நவாம்சம் புதனால் ஆளப் படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர்கள் சகலகலா வல்லவர்.

ப் பூராட நட்சத்திரத்தின் மூன்றாவது பாதம் துலா நவாம்சம். சுக்கிரனால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர் களுக்கு, வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். 

ப் பூராட நட்சத்திரத்தின் நான்காவது பாதம் விருச்சிக நவாம்சம். செவ்வாயால் ஆளப்படுகிறது. இந்த பாதத்தில் பிறந்தவர்களுக்கு, செய்வினை பாத்திப்பு உண்டாகும். 

பூராட நட்சத்திர நாளில் செய்யத்தக்க சுப காரியங்கள்

ப் விதை விதைக்க, தானியம் வாங்க, கடன்  தீர்க்க ஏற்ற நாள்.

பூராட நட்சத்திர பரிகாரம்

ப் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி அம்மனை வணங்கி,  வாசனை திரவியங்களை தானமாக வழங்கலாம்.

ப் வெண்ணெய், தயிர், கற்பூரம் ஆகிய வற்றை தானம் செய்வது நல்லது.

ப் திருவரங்கம் ரங்கநாதர்  வழிபாடு பூராட நட்சத்திரக் காரர் களுக்கு விசேஷ பலன் களைத் தரும்.